நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக விக்கிபீடியா பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தான் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் போன்ற விசேஷங்களில் தனியாகவே கலந்து கொண்டார் என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் சங்கீதா லண்டன் சென்றுள்ளதாகவும், இந்த வருட வெக்கேஷனை தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் செலபிரேட் செய்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யும் பணிகளை முடித்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இப்படி ஒரு பரபரப்பு விஷயம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும் விக்கிபீடியா பேஜில் யாரோ சிலர் மாற்றம் செய்துள்ளனர். விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்கள் மாற்றக்கூடியவை. எனவே இதனைப் பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர், பொய்யான தகவலை எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, சில அரசியல் தலைவர்களின் பெயர்களை தவறாக விக்கிபீடியாவில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.