fbpx

பிரபல இயக்குனருடன் மீண்டும் கூட்டணி வைக்கிறாரா கமல்ஹாசன்…? வெளியான ருசிகர தகவல்…!

நடிகர் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் மிகவும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமால் பிலிம்ஸ் மூலமாக மற்ற கதாநாயகர்களை வைத்தும் திரைப்படங்களை எடுக்க தொடங்கி விட்டார். அத்துடன் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று எப்போதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த சூழ்நிலையில் தான் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டும் விதத்தில், மற்றொரு திரைப்படத்தை நடிக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரித்த லிங்குசாமி சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றார். அப்போதுதான் மறுபடியும் கூட்டணி சேர்வது தொடர்பாக இருவரும் முடிவு எடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

உத்தமவில்லன் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டும் விதத்தில், கமல்ஹாசன் படம் நடிப்பதை லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியின் மூலமாக அறிவித்திருக்கிறார். ஆனால் திரைப்படத்தை அவரே இயக்குகிறாரா? அல்லது வேறு இயக்குனரை வைத்து இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Post

2024 தேர்தலில் பாமக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும்..! திமுக, அதிமுகவுடன் இல்லை? அன்புமணி ராமதாஸ்...

Wed Jan 4 , 2023
பாமகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை, தூத்துக்குடி தொகுதிகள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் இதை மத்திய மாநில அரசுகள் […]

You May Like