fbpx

ஆன்லைன் மூலம் ரூ.8,000 ஆய்வு கட்டணம்‌ செலுத்த வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..‌‌.!

2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌, அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

அங்கீகாரம்‌ பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம்‌ சமர்ப்பித்தால்‌ போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்‌ / கூடுதல்‌ அலகுகளுக்கு தேவையான விவரங்கள்‌ அனைத்தும்‌ ஒரே விண்ணப்பத்தில்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்ப கட்டணம்‌ மற்றும்‌ ஆய்வுக்கட்டணம்‌ RTGS/NEFT மூலம்‌ செலுத்த வேண்டும்‌.

அனைத்து தொழிற்‌ பிரிவுகளுக்கும்‌ சேர்த்து விண்ணப்ப கட்டணம்‌ ரூ.5000/- மற்றும்‌ ஆய்வு கட்டணம்‌ ரூ.8000/- செலுத்த வேண்டும்‌. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 28.02.2023 ஆகும். இதற்கு பின்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. மேலும்‌ அங்கீகாரம்‌ குறித்த தகவல்‌ மற்றும்‌ அறிவுரைகள்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

விலை உயர்ந்த காரை வாங்கிய விஜே பார்வதி!!!

Thu Jan 5 , 2023
தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த விஜே பார்வதி, குறுகிய காலத்திலையே நிறைய ரசிகர்களின் கவனித்தை ஈர்த்தார். பிறகு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேர்த்துக்கொண்டு சிறிது நாட்கள் இருந்தாலும் கன்டென்ட்களுக்கு பஞ்சமில்லாமல் கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு […]

You May Like