தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த விஜே பார்வதி, குறுகிய காலத்திலையே நிறைய ரசிகர்களின் கவனித்தை ஈர்த்தார். பிறகு ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேர்த்துக்கொண்டு சிறிது நாட்கள் இருந்தாலும் கன்டென்ட்களுக்கு பஞ்சமில்லாமல் கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என அவரே திட்டவட்டமாக கூறியிருந்தார்.
எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் விஜே பார்வதி தற்போது புதிய ஜீப் ஒன்றை வாங்கியுள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் “எனது இணையக் குடும்பம், சந்தாதாரர்கள், சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள், யூடியூப் பார்வையாளர்கள், சினிமா, ஊடகம், கல்லூரி மற்றும் பள்ளியின் நலம் விரும்பிகள்.. எனது பணியை ஆதரித்ததற்கு நன்றி, இது சிறிய வெற்றி. நிறைய தூரம் செல்லவேண்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.