fbpx

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி..!! ஆத்திரத்தில் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..!!

காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பூஜா – லோகேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பூஜா லோகேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காதலன் லோகேஷ், காதலியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து, காட்டுப் பகுதியில் சாலையோரம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூஜா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி..!! ஆத்திரத்தில் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..!!

அங்கு சிகிச்சை பெற்று வந்த பூஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காதலன் லோகேஷ் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் லோகேஷை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

40 வயதான நபர்.. இன்ஜினியர் மாணவியை லவ் டார்ச்சர் செய்த கொடூரம்..!

Thu Jan 5 , 2023
நான்காம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வேணுகோபால் என்பவர் தனக்கு 40 வயதாகிறது என்றும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.  தனது முன்னாள் மனைவி மூலம் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், சில சமயங்களில் காலிலும், சில சமயம் மோட்டார் சைக்கிளிலும் மெதுவாக என்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே […]

You May Like