fbpx

’முதலமைச்சர் நாற்காலியில் கனிமொழி’..? அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பம்..!! அதிரவைத்த போஸ்டர்..!!

திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் வாரிசுகள் அதிகாரப் போட்டியில் இருந்து மு.க.அழகிரி விலகிவிட்டார். இதனால் மு.க.ஸ்டாலின் போட்டியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினுக்கும் போட்டி இருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. எந்த நேரத்திலும் போட்டியாக கனிமொழி முன்வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது என்று அக்கட்சியினரே தெரிவித்துள்ளனர். அதற்கேற்றார் போல் கனிமொழியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். இன்று, திமுக எம்பி கனிமொழி பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

’முதலமைச்சர் நாற்காலியில் கனிமொழி’..!! அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பம்..!! அதிரவைத்த போஸ்டர்..!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கே. மோகன் சார்பில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பெரியார், அண்ணா, கலைஞர், முக.ஸ்டாலின் ஆகியோர் கனிமொழியை நாற்காலியில் அமர வைத்து பெருமிதம் கொள்கிறார்கள். கனிமொழி கையெழுத்து போட கலைஞர் பேனா எடுத்துக் கொடுக்கிறார். இதன் பின்னணியில் தலைமைச் செயலகம் உள்ளது. இதனால் கனிமொழியை முதலமைச்சரை போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது ‘முதல்வர் நாற்காலி’ என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. இது திமுகவில் கிளர்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று விமர்சித்துள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.  

’முதலமைச்சர் நாற்காலியில் கனிமொழி’..!! அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பம்..!! அதிரவைத்த போஸ்டர்..!!


ஆனால் அந்த போஸ்டரில், கனிமொழி அமர்ந்திருக்கும் மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை உதயநிதி அமைச்சராகிவிட்டதால் கனிமொழியும் அமைச்சர் பதவியை வகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மோகன் அப்படி ஒரு போஸ்டரை வடிவமைத்து இருக்கிறாரா? என்று தெரியவில்லை. மாநில அரசியலில் வாரிசு போட்டி வரக்கூடாது என்பதற்காகத்தான் கனிமொழியை டெல்லி பக்கம் அனுப்பி வைத்திருக்கிறது ஸ்டாலின் குடும்பம் என்ற ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த போஸ்டரில், ‘புறம் காத்தது போதும் அகம் காக்க வா’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

’முதலமைச்சர் நாற்காலியில் கனிமொழி’..!! அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பம்..!! அதிரவைத்த போஸ்டர்..!!

கனிமொழியை டெல்லி அரசியலுக்கு தள்ளிவிட்டாலும் கூட அவர் மாநில அரசியலைத்தான் விரும்புகிறாரோ என்கிற கேள்வியும் கனிமொழியின் ஆதரவாளரின் போஸ்டர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வருங்கால முதல்வரே… என்றும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.

Chella

Next Post

லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த அமைச்சர் சிவசங்கர்..!! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

Thu Jan 5 , 2023
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிஃப்ட் பழுதானதால், அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக் கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிருக்கு சுய உதவி குழுக்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வருகை தந்தார். அப்போது, மேல் தளத்திற்கு செல்வதற்காக […]
லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த அமைச்சர் சிவசங்கர்..!! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

You May Like