விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் விரும்பி பார்த்து வந்த ஒரு வெற்றிகரமான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி.
இந்த தொடரில் முதல் சீசனில் நடித்து வந்த கதாநாயகன் மற்றும் கதாநாயகியான செந்தில், ஸ்ரீஜா உள்ளிட்டோர் அந்தத் தொடரில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து மாப்பிள்ளை என்ற தொடரில் நடித்திருக்கிறார்கள்.
அத்துடன் கடந்த 2014ஆம் வருடம் இந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று செந்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் 9 வருடங்களுக்குப் பிறகு செந்தில், ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனை செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இந்த செய்தியை கேள்வியுற்றவுடன் பிரபலங்கள் செந்தில், ஸ்ரீஜா தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.