fbpx

ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! வாரிசு, துணிவு படத்திற்கான அதிகாலை காட்சிகள் ரத்து..!! வெளியான அறிவிப்பு..!!

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால், அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது. சமூக வலைத்தளம், போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது.

ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! வாரிசு, துணிவு படத்திற்கான அதிகாலை காட்சிகள் ரத்து..!! வெளியான அறிவிப்பு..!!

இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியாவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4, 5 மணி காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும் பாலாபிஷேகம், கட் அவுட், பேனர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் விலைக்கு டிக்கெட், பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் வாலிபர்..!! ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..!! வீடியோவை காட்டி மிரட்டல்..!!

Tue Jan 10 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்துள்ளனர். குழித்துறை பெண் கொடுத்த புகாரில், ”எனக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018இல் கணவரை பிரிந்து விட்டேன். இந்நிலையில், எனது செல்போனுக்கு வந்த ‘மிஸ்டு கால்’ அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் […]
கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் வாலிபர்..!! ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..!! வீடியோவை காட்டி மிரட்டல்..!!

You May Like