நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெறும் வசனம் ஒன்று, இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து பாசிடிவ் கமெண்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் வசனம் ஒன்று இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத” என பேசி உள்ளார்.

இந்த வசனம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் என்பதால், இது உங்கள் செய்கை தானா அமைச்சரே எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
