fbpx

இன்றுடன் முடிவடைந்த வடகிழக்கு பருவமழை..!! ஆனால், இனிதான் ஆட்டமே இருக்கு..!! வானிலை மையம் முக்கிய தகவல்..!!

வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ”வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக் கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை

ஜனவரி 14ஆம் தேதி 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு முதலாளியை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!! விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

Thu Jan 12 , 2023
தெலங்கானா மாநிலம் ஃபரூக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஷபதி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பிஷபதியின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவருக்கு கீழ் பணியாற்றிய ஸ்ரீகாந்த், சதீஷ், சம்மன்னா மற்றும் வீட்டின் காவலாளி உட்பட 4 பேரும் அவரை திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலாமாகியுள்ளது. ஸ்ரீகாந்த் தான் […]

You May Like