ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.
2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. கடந்த 2018இல் நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் கொரோனா காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆடவர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2023 லீக் சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் இன்று முதல் தொடங்குகிறது.

கடந்த 11ஆம் தேதி இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு, ரூர்கேலாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக மதியம் ஒரு மணிக்கு அர்ஜென்டினா அணி தென் ஆப்பிரிக்காவையும், மதியம் 3 மணிக்கு ஆஸ்திரேலிய அணி பிரான்ஸ் அணியையும், மாலை 5 மணிக்கு இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.