fbpx

இனி ஆசிரியர்களை இப்படி அழைக்க கூடாது… பள்ளிக் கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்…!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகளை சார், மேடம் என்று அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில், கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலினத்தை குறிக்கும் வகையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அதனை பரிசீலனை செய்து கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும், ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீச்சர் என்று அழைக்கப்படுவதால் சமத்துவம், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களுடனான பிணைப்பு  அதிகரிக்க கூடும் என்று மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

#ராமநாதபுரம்: 10 நாட்களில் மணவறை ஏறவேண்டிய மணமகன்.. பிணவறையில் கிடந்த சோகம் ..!

Sat Jan 14 , 2023
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள புதூரில் அலெக்சாண்டர் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அழைப்பிதழ்களை கொடுக்க புறப்பட்டுள்ளார். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் அண்டகுடி அருகே அவருக்கு எதிர் […]
அதிர்ச்சி..!! ’சாலை விபத்துகளில் அதிக மரணங்கள் நிகழ்வதற்கு இதுவே முக்கிய காரணம்’ - மத்திய அரசு

You May Like