வாரிசு துணிவு பொங்கல் வெற்றி படம் எது….? விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு….!

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


சென்ற 2014 ஆம் வருடம் இதே போல பொங்கலன்று அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகளிக்க வைத்தது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

அதாவது இந்த பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் உள்ளிட்டோர் நேரடியாக களம் கண்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வேலை செய்திருக்கிறது. திரையரங்குகள் மற்றும் ஷோ ஒதுக்கீடு மாறும் என்பதால் எந்த திரைப்படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்று குழப்பம் நீடித்து வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டதால் அந்த திரைப்படத்திற்கு தான் அதிக ஷோக்கள் முதல் நாளில் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது. ஆகவே தமிழகத்தில் துணிவு திரைப்படம் தான் முதல் நாளில் வசூலில் சாதனை படைத்தது.

ஆனால் வாரிசு திரைப்படத்தை வெளியிட்ட 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பொங்கல் வின்னர் என்று குறிப்பிட்டு புது போஸ்டர் இந்த குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணா இருக்கலாம். ஆனால் ஆடியன்ஸ் டிக்லர் பண்ணிட்டாங்க இது வாரிசு பொங்கல் தான்னு என ட்வீட் செய்திருக்கின்றனர். தற்போது அந்த டுவிட் வைரலாகி வருகிறது

Next Post

’இனி சாதாரண டிக்கெட் எடுப்பவர்களும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கலாம்’..!! ரயில்வே துறை அதிரடி..!!

Sat Jan 14 , 2023
ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள், ஒருசில பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதும் தெரிந்தது. அதையும் மீறி சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் விதிப்பார் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளையும், ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் […]
Train

You May Like