ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை புதிய புதிய மாடல்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதற்கு முன்னர் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
டிஸ்ப்ளே
ஸ்மார்ட் போனின் டிஸ்ப்ளே அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தாலே போதுமானது.
இன்டெர்நெட்
அதிகமாக இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிகமாக கேம் விளையாடுபவர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்கலாம்.
இன்டர்னல் மெமரி
இன்டேனல் மெமரி (Internal Memory) அல்லது ROM-இன் அளவு 16GB, 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றில் கிடைக்கிறது. குறைந்தபட்சம் 16 GB மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது.
பாதுகாப்பு
ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார். கைரேகை மூலம் போனை லாக் அல்லது அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் பல ப்ரீமியம் போன்களிலும் வருகிறது. இது போனுக்கான பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றும்.
கேமரா
13 MP மேல் அதிகமுள்ள கேமராவை கொண்ட செல்போன் வாங்குவது புகைப்பட விரும்பிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்பீக்கர்
வீடியோக்கள் பார்ப்பதற்கும், இசையைக் கேட்பதற்கும் மற்றும் பலவற்றிற்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஸ்பீக்கர்களின் தரம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை சரிபார்க்க வேண்டும்.
விலை
உங்கள் பாக்கெட்டுக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய ஃபோனைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையைப் பொறுத்து ஒரு தொலைபேசி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.