fbpx

மகனுடன் பேசிவிட்டு குளிக்கச் சென்ற நேரத்தில் மரண செய்தி..!! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய், குளித்துவிட்டுத் திரும்பி வந்தபோது தன் மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேகமாக மோதியதில் அந்த மரமும் சாய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் நிகழ்வதற்கு முன்தான் அந்த இளைஞர் தனது தாயுடன் செல்போனில் பேசியுள்ளார்.

மகனுடன் பேசிவிட்டு குளிக்கச் சென்ற நேரத்தில் மரண செய்தி..!! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

மகனிடம் பேசியபின், தாய் குளிக்கச் சென்றுள்ளார். அவர் குளித்துவிட்டுத் திரும்பிவந்தபோது விபத்து குறித்த தகவல் கிடைக்க, சற்று முன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த தன் மகன் உயிருடன் இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தன் மகன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ள இளைஞரின் தாய், அது தவிர்த்து விபத்துக்கு வேறு காரணங்கள் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

பாலத்தின் கீழ் அழுகி, முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்.. தீவிர விசாரணையில் போலீசார்..! 

Tue Jan 17 , 2023
ஆந்திர மாநிலத்தில் பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே அனக்காபள்ளி அடுத்த கொத்த பள்ளம் கிராமத்தில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளார்கள். தற்செயலாக அப்பகுதியில் இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் இளைஞர்கள் தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அந்த உடல் […]

You May Like