fbpx

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி..!! பட்டப்பகலில் பயங்கர சம்பவம்..!!

மதுரையில் காவல் ஆய்வாளர் மீது, ரவுடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பிரபல ரவுடியான கூல்மணி (எ) மணிகண்டன் (30) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அப்பகுதியில் பெரும் ரவுடி போல் வலம் வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது கொள்ளை வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதன்பிறகு அழகுமுத்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் சக காவலர்களுடன் மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தார்.

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி..!! பட்டப்பகலில் பயங்கர சம்பவம்..!!

அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை மடக்கியபோது, உள்ளே ரவுடி கூல்மணி இருப்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது, திடீரென கூல்மணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகுமுத்துவை வெட்ட முயன்றார். இதனை சுதாகரித்துக் கொண்டு விலகியதால், அழகுமுத்து காயம் இன்றி தப்பினர். பின்னர், காரிலிருந்து இறங்கி அங்கிருந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கூல்மணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கூல்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி..!! ஜி.கே.வாசன் பரபரப்பு அறிவிப்பு..!!

Fri Jan 20 , 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பாக தமாகாவுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் தமாகா வேட்பாளராக எம். யுவராஜா போட்டியிட்டார். எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி..!! ஜி.கே.வாசன் பரபரப்பு அறிவிப்பு..!!

You May Like