fbpx

சமூக ஊடக பிரபலங்கள் இந்த புதிய விதிகளை மீறினால்.. ரூ.50 லட்சம் அபராதம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோருக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது..

இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. அதன்படி, சமூக ஊடக பிரபலங்கள் பணம் வாங்கிய பிறகு எந்த பிராண்டிற்கும் ஒப்புதல் அளித்தால், அவர்கள் அந்த பிராண்டுடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பிரபலங்கள் மற்றும் மெய்நிகர் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் கூட இந்த புதிய விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காத பட்சத்தில் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் ( Social Media Influencers) ரூ. 10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.. முதல் முறை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம், இரண்டாவது முறை ரூ.20 லட்சம், தொடர்ந்து மீறினால் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்..

மேலும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் காண்பிக்கும் தயாரிப்பின் விளம்பரத்திற்காக பணம் பெற்றிருந்தால், அதனை தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். ஒப்புதல் அளிப்பதற்கு முன், தயாரிப்பு மற்றும் சேவையை உண்மையில் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லது ஒப்புதலளிப்பவர் அனுபவித்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நுகர்வோர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்..

விளம்பரங்களில் உண்மை மற்றும் நேர்மையான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், மேலும் தயாரிப்புகளின் துல்லியம், அறிவியல், செல்லுபடியாகும் தன்மை அல்லது நடைமுறை பயன் அல்லது செயல்திறன் ஆகியவற்றை பெரிதுபடுத்தி நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடாது..” என்று தெரிவித்துள்ளது.

Maha

Next Post

செம வாய்ப்பு...!மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் உள்ளே...!

Sat Jan 21 , 2023
பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. MTS எனப்படும் பன்னோக்கு தொழில்நுட்பம் சாராத பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு-2022 (நிலை-1)-ஐ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ssc.nic.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி […]

You May Like