fbpx

கவனம்…! குடியரசு தின சிறப்பு ரயில்…! இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம்…!

குடியரசு தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 26 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 27 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

’இனி ரயில்களில் இஷ்டத்திற்கு தூங்க முடியாது’..!! புதிய விதிமுறைகளை அறிவித்தது இந்திய ரயில்வே..!!

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06054) ஜனவரி 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

Vignesh

Next Post

முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் இயங்குதளம் BharOS.. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்..?

Sun Jan 22 , 2023
உலகளவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது.. ஸ்மார்ட்போனை சரியாக இயக்கவும், அதை சரியான கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கவும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.. இந்த நிலையில் இந்தியா முதன்முதலாக ஒரு பாதுகாப்பான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி உள்ளது.. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட OS-ஐ சென்னை ஐஐடி, ஜாண்ட்கே ஆபரேஷன்ஸ் லிமிடெட் உதவியுடன் உருவாக்கி உள்ளது.. இதற்கு BharOS என்று பெயரிடப்பட்டுள்ளது… பிரதமர் […]

You May Like