fbpx

மதபோதகரால் மானமே போச்சு..!! திருமணம் ஆகாமல் 10 வருஷமா அது மட்டும்தான்..!! இளம்பெண் கதறல்..!!

மதபோதகர் மீது மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்ற பெண், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், “மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருகிறேன். தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக என்னுடன் நெருக்கமாக பழகி, மனைவி போல் வாழ்ந்து வந்தார். மேலும், எனக்கு தெரியாமல் சாமுவேல், சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். என்னை திருமணம் செய்வதாக கூறி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று பொய் சொல்கிறார். மேலும், நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளைப் பேசி என்னை திட்டுகிறார். என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறார். ஏதாவது பேசினால் அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை மிரட்டுகிறார. எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

மதபோதகரால் மானமே போச்சு..!! திருமணம் ஆகாமல் 10 வருஷமா அது மட்டும்தான்..!! இளம்பெண் கதறல்..!!

குடும்ப கஷ்டம் எனக்கூறி ரூ.2 லட்சம் வரை என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால், அவரது மாமா முத்துஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்த போது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினார்கள். எனவே, அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். மத போதகர் சாமுவேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தேமுதிக தனித்துப் போட்டி..!! ஓபிஎஸிடம் ஆதரவு கோர முடிவு..!! எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!!

Mon Jan 23 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேமுதிக […]
தேமுதிக தனித்துப் போட்டி..!! ஓபிஎஸிடம் ஆதரவு கோர முடிவு..!! எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!!

You May Like