இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![இந்து சமய அறநிலையத்துறை](https://1newsnation.com/wp-content/uploads/2021/12/meenakshi-temple-1512.jpg)
பணியின் விவரங்கள்…
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
செயற்பொறியாளர் (2), உதவி செயற்பொறியாளர் (4), உதவிப் பொறியாளர் (4)
சம்பள விவரம்:
செயற்பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.35,000
உதவிச் செயற்பொறியாளர் – ரூ.30,000
உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.25,000
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பிற அரசுத்துறை/ அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஓய்வு பெற்ற பொறியாளர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://hrce.tn.gov.in/resources
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034