fbpx

இனி அதிரடி தான்..!! களத்தில் இறங்கிய முதல்வர்..!! இந்த தவறை செய்தால் உரிமம் ரத்து..!!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் அல்லது மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிய அவ்வபோது ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் பணிகளில் ஈடுபடுபவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பைக் சாகசம் நடைபெறுவதை கண்டறியும் விதமாக தொழில்நுட்பம் மிகுந்த சைபர் ரோந்து சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

’அவன்கிட்ட இனி பேசாத’..!! கள்ளக்காதலை கண்டித்த கணவன்..!! தூங்கும் நேரத்தில் மனைவி செய்த காரியம்..!!

Thu Jan 26 , 2023
கள்ளக்காதலை கைவிட மறுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், புவனேஷ்வரிக்கும் அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி […]
’அவன்கிட்ட இனி பேசாத’..!! கள்ளக்காதலை கண்டித்த கணவன்..!! தூங்கும் நேரத்தில் மனைவி செய்த காரியம்..!!

You May Like