fbpx

எல்லையில் சீனா செய்து வரும் செயல்.. லடாக் காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

எல்லையில் ராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துவதால், இமயமலைப் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று லடாக் காவல்துறை தெரிவித்துள்ளது..

இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்படுகிறது… அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர்.. இதில் இந்திய தரப்பில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர்.. பின்னர் இந்திய – சீன இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பதட்டங்கள் தணிந்தன. இதனிடையே கடந்த டிசம்பரில் கிழக்கு இமயமலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு புதிய மோதல் வெடித்தது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

சீன

இந்நிலையில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற லடாக் உயர் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட லடாக் காவல்துறையின் புதிய, ரகசிய ஆய்வறிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. எல்லைப் பகுதிகளில் உள்ள உள்ளூர் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை மற்றும் பல ஆண்டுகளாக இந்தியா-சீனா இராணுவ பதட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அறிக்கை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.. அதில், எல்லையில் இராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துவதால், இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் அந்த அறிக்கையில் ” சீன ராணுவம் தனது உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதைத் தொடர்ந்து வருகிறது.. இதனால்.. இந்தியா – சீனா இடையே மோதல்களும் அடிக்கடி நடக்கும்.. ஒவ்வொரு 2-3 ஆண்டுகளுக்கு ஒரு இடைவெளியுடன் 2013-2014 முதல், எல்லை மோதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது.. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைவதால், லடாக்கில் இந்தியா மெதுவாக சீனாவிடம் தளத்தை இழந்து வருகிறது..” தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவும் சீனாவும் 3,500 கிமீ (2,100 மைல்கள்) எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, 1950களில் இந்திய – சீன பிரச்சனைக்குரியதாக மாறியது. இது தொடர்பாக 1962ல் இரு தரப்பினரும் போர் தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...! அடுத்த 3 நாட்களுக்கு மழை...‌! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Jan 28 , 2023
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like