கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதவி விலகல்..? தொழிற்சங்கம் அதிரடி..!!

பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை லாபமாக ஈட்டிய நிலையில் கூகுள் நிறுவனம், ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதற்கு பொறுப்பான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


கொரோனா காலத்திற்கு பிறகு, உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து வருகிறது. இதனால் லாபமீட்டும் நிறுவனம், சிறப்பாக செயல்படாத நிறுவனம் என பாகுபாடின்றி பெரும்பாலான நிறுவனங்கள், முதற்கட்டமாக பணியாளர்களில் கணிசமானோரை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. அந்தவகையில், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடுமையான பொருளாதார சூழலிலும் ஆல்ஃபாபெட் நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியினை கண்டது. புதிதாக ஏராளமானோர் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர்.

ஆனால், தற்போது மோசமான பொருளாதார சூழலை நிறுவனம் எதிர்கொண்டு வருகின்றது. ஆகையால் வேறு வழியின்றி பணிநீக்க நடவடிக்கையில் நிறுவனம் இறங்கியுள்ளது என ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார். எனினும், பல ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தியுள்ளது ஆல்ஃபாபெட் தொழிலாளர்கள் சங்கம். கடந்த காலாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை கூகுள் நிறுவனம் ஈட்டியுள்ளது. எனவே, பணி நீக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறும் தொழிற்சங்க அமைப்பு, சுந்தர் பிச்சைக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நீங்கள் ஏன் பதவி விலகக்கூடாது? நீங்கள் தவறான பந்தயம் கட்டினால், நீங்கள் ஏன் அதற்கான பணத்தை செலுத்தக்கூடாது என்ற கேள்வியை YourDOST இன்ஜினியரிங் இயக்குனர் விஷால் சிங் எழுப்பியுள்ளார்.

கூகுள் மட்டும் அல்ல, மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட சில நிறுவனங்களும் பணிநீக்கம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. சுமார் 60,000 தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனி தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்கான ஆல்ஃபாபெட்டை நம்பியிருக்க முடியாது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

அட்டகாசமான இ-சைக்கிள்..!! ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Sat Jan 28 , 2023
பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இ-பைக் கோ நிறுவனம் மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் பிரபலம். இந்நிறுவனம் தற்போது மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. டிரான்சில் பிராண்டின் கீழ் டிரான்சில் இ1 எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.45 ஆயிரம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இந்த சைக்கிளில் அதற்கேற்ற சிறப்பம்சங்கள் […]
அட்டகாசமான இ-சைக்கிள்..!! ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

You May Like