#BIGBREAKING : இனி யாரும் ரஜினியின் பேரை பயன்படுத்தக் கூடாது.! ரஜினி விதித்த தடை.!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் குரல், பெயர், போட்டோ ஆகியவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.


இது குறித்த அறிவிப்பை ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டு இருக்கின்றார். அதில், “நடிகர் ரஜினிகாந்தின் பெயர் புகைப்படம் குரல் ஆகியவற்றை அனுமதி பெறாமல் இனி எந்த இடத்திலும் யாரும் பயன்படுத்துவது கூடாது.

ரஜினியின் புகைப்படங்கள் கம்ப்யூட்டர் அனிமேஷன் உள்ளிட்ட அனைத்துமே ரஜினிக்கு மட்டும்தான் சொந்தம். இந்த விஷயங்களை அடுத்தவர்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் உருவாக்கப்படுகிறது. இதை தவிர்க்க இனி அவரது பெயர், குரல், புகைப்படம் ஆகியவற்றை யாரும் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

ஆரோக்கியமாகவும், மன நிம்மதியோடும் வாழ.. இதை பண்ணுங்க., போதும்.!

Sun Jan 29 , 2023
காலை உணவை தவிர்க்காதீர்கள்!ஒரு நாளை ஆரம்பிக்கும் போது முழு உற்சாகமாக உருவாக்கிக்கொள்ள காலை உணவு மிக முக்கியம். காலை உணவை உட்கொள்ளுவதினால் உணவு இடைவேளைகளில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதிலுருந்து உங்கள தவிர்த்துக்கொள்ளலாம். சர்க்கரையை தவிருங்கள் :உங்கள் டீ காபிகளில் போடும் சர்க்கரையை தவிருங்கள் அல்லது குறைத்துக்கொள்ள்ளுங்கள். இது உங்களின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது . டைரி எழுதுங்க:தினமும் நீங்கள் சந்தித்த, ஏற்பட்ட நிகழ்வுகளை எழுதுங்கள். நாளை முடிக்கவேண்டிய, செயல்படுத்த வேண்டியவற்றை […]
IMG 20230128 WA0077

You May Like