fbpx

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தளபதி 67.. ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட்..

தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார்.. தற்காலிகமாக ‘ தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்..

இது தான் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.. இவர்கள் தவிர கமல்ஹாசன், அர்ஜுன், விக்ரம், மிஷ்கின், கௌதம் மேனன், நிவின் பாலி, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.. 7 ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்..

லோகேஷ் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் ஒரு பகுதியாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.. குறிப்பாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பத்திரத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. அதே போல் தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீருக்கு செல்ல உள்ளனர்.. சுமார் 60 நாட்கள் காஷ்மீரில் படப்படிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த படத்தை அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இதனிடையே தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.. அதற்கான டீசர் வீடியோவை உருவாக்கி உள்ளதாம்.. அதற்கான பணிகள் முடிந்துவிட்டதாகவும் இந்த புரோமோ வீடியோ வரும் 3-ம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் டைட்டிலும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Maha

Next Post

#Breaking : பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

Mon Jan 30 , 2023
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.. பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.. தேர்வு கண்காணிப்பாளர்களை எப்படி நியமிப்பது..? வினாத்தாள் பாதுகாப்பு போன்றவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் […]
’எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது’..! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!

You May Like