புண்களை ஆற்றும், விஷத் தன்மையை முறிக்கும் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை குணப்படுத்தும் தலைவெட்டி பூச்செடியின் எண்ணற்ற மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைவெட்டிப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது புல்வெளிகள் நிறைந்த அனைத்து இடங்களிலும் புதர்போல் மண்டிக் கிடக்கும். இதற்கு மூக்குத்திப் பூச்செடி, தாத்தா பூ செடி, கிணத்து பூண்டு செடி என பல்வேறு பெயர்கள் உண்டு. மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் பூக்கள் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும். காய்களில் விஷத்தன்மை உடையதால் இதை சாப்பிடக் கூடாது.
புண்களை ஆற்றும், விஷத் தன்மையை முறிக்கும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும், மூட்டு வலியை மாயமாக்கும், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக அமைகிறது மூக்குத்தி பூச்செடி. உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் நிற்காமல் சென்றால் அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலை சாரை விட்டால் உடனடியாக இரத்தம் அதிகம் போவது நின்று விடும்.
முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறிது நல்லெண்ணை விட்டு அதில் இலை பூ வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டி விடுங்கள் வலி உடனடியாக தீர்ந்துவிடும், பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும். சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த செடியின் சாறை இலை உடன் சேர்த்து தேய்த்து வந்தால் தேமல் 2, 3 நாட்களில் மறையும்.
Read More : இந்த ஒரு ஜூஸ் போதும்..!! சிறுநீரக கற்கள் பிரச்சனையே வராது..!! மருத்துவர்கள் கொடுக்கும் அட்வைஸ்..!!