உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாக, ஒருவரின் வீட்டு கதவைத் தட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ததில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்தப் பெண்ணை இரண்டு பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த பெண்ணையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.