டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோவின் ஜாக் உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.
1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த விபத்து மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்பட்டு வருகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை 1997 ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்பட டைட்டானிக் வெளியானது. இப்படத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர். உண்மைக் காதலை மையமாக வைத்து, பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான ‘டைட்டானிக்’ மூழ்கிய சோகக் கதையை வைத்து இப்படம் வெளிவந்து உலக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது. ‘டைட்டானிக்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் திரைப்படத்தில் உள்ள பல சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் ஆய்வு செய்துவருகிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூனுடன், இயக்குனர் தனது ரசிகர்களை அவரது சிந்தனை செயல்முறையைப் பார்க்க அனுமதித்தார். அப்போது பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஜாக் உயிர் பிழைக்க ஒரு வழி இருந்ததாக கூறுகிறார். மிதக்கும் பொருள் மீது இருவரும் ஏறி இருந்திருக்கலாம் என்றும், தனது லைஃப் ஜாக்கெட்டை ஜாக்கிற்கு ரோஸ் கொடுத்து காப்பாற்றி இருக்கலாம் எனவும் கூறுகிறார்..இதைப்போல ஜாக் சென்ற ஒரு இடத்தில் அவசரகால படகு வந்ததாகவும், அதில் ஏறி உயிர் பிழைத்திருக்கலாம் எனவும் கூறுகிறார். ரோசின் மனதை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்ற சிந்தனையில் ஜாக் செயல்பட்டதாக கூறும் கேமரூன், நிறைய மாறுபாடுகள் இருப்பதால் கிளைமேக்சில் நடிகர் இறப்பது போன்ற காட்சியை வைத்ததாக கூறுகிறார்