fbpx

அக்னிவீர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்..!! இனி ஆன்லைன் நுழைவுத் தேர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, முதலில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணிபுரியும் வகையில், அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுகின்றனர். இதில், சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற செயல்முறை முன்பு இருந்தது. இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் முதலில் ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும். பின்னர் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, கடைசியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 200 இடங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் தற்போது அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Chella

Next Post

நாய்க்கு சாதி சான்றிதழ்..!! மிரள வைக்கும் ஆதார் அட்டை..!! மிரண்டு போன அதிகாரிகள்..!!

Sun Feb 5 , 2023
நாயின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குராரு மண்டல அலுவலகத்துக்கு, டாமி என்ற நாய்க்கு, சாதி சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பத்துடன் நாய் பெயரிலான ஆதார் அட்டையின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். […]
நாய்க்கு சாதி சான்றிதழ்..!! மிரள வைக்கும் ஆதார் அட்டை..!! மிரண்டு போன அதிகாரிகள்..!!

You May Like