fbpx

மின் கட்டண முறையில் அதிரடி மாற்றம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!!

விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தவறான கருத்து. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.

மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அதிமுக கடந்த பத்து ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010இல் இருந்த மின்கட்டணத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்” என்றார்.

Chella

Next Post

காதலர் தினம்.. 95 மில்லியன் இலவச ஆணுறைகள் வழங்கப்படும்... எந்த நாட்டில் தெரியுமா..?

Sun Feb 5 , 2023
காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலுக்கான கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, அதாவது பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகின்றன. இதை கருத்தில் கொண்டு, தாய்லாந்து அரசு இலவச ஆணுறைகளை வழங்க உள்ளது.. பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் இள வயது கர்ப்பம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் 95 மில்லியன் இலவச ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.. உலகளாவிய சுகாதாரத் திட்டத்தின் […]

You May Like