கென்யாவில் 3 சகோதரிகளை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலதார மணம் (polygyny)என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்து வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இந்தமுறை உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய திருமணத்திற்கு பெரும்பாலான நாடுகளில் சட்டப்படி அனுமதி கிடையாது. இந்தநிலையில், கென்யாவில் இளைஞர் ஒருவர் 3 சகோதரிகளை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸ்பல் இசையில் பணியாற்றி வரும் கேட், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டீவோவிடம் கேட்டபோது, முதலில் கேத் தான் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். பின்னர் கேத்தின் சகோதரிகளிடம் பேசி பழகிவந்ததாகவும், தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்து 3 பேரையும் திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும் கூறினார். தான் பிறப்பிலேயே பலதார மணம் கொண்டவராகதான் பிறந்ததாக கூறிய ஸ்டீவோ, தனது மூன்று மனைவிகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வதில் சிரமமாக இல்லை என்று கூறிய ஸ்டீவோ, அது ஒரு பெரிய விஷியமே இல்லை என்றும், கடுமையான அட்டவணையை பின்பற்றி 3 பேருடன் சமமாக நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், நாங்கள் மூவரும் அவருக்கு போதுமானவர்கள், மேலும் அவரை இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்டீவோவின் மனைவிகள் கூறினர்.