fbpx

நடிகர் கருணாஸ் மகளுக்கு டும் டும் டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் கருணாஸ். இதையடுத்து தனுஷுடன் திருடா திருடி, சிம்புவின் குத்து, அஜித் உடன் வில்லன் என தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவில் காமெடியனாக ஜொலித்தார் கருணாஸ். இதையடுத்து இவர் ஹீரோவாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கருணாஸ் நடிகராக மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். கருணாஸின் மனைவி கிரேஸும் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு கென் என்ற மகனும், டயானா என்கிற மகளும் உள்ளனர்.

நடிகர் கருணாஸ் மகளுக்கு டும் டும் டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!

கருணாஸின் மகன் கென், சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார். இதுதவிர அழகு குட்டி செல்லம், ரகளபுரம் போன்ற படங்களிலும் கென் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர், தனது தாய் கிரேஸ் உடன் இணைந்து உருவாக்கி இருந்த வாடா ராசா என்கிற ஆல்பம் பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் ஆனது. இவ்வாறு கருணாஸ் குடும்பத்தில் 3 பேரும் சினிமாவில் பாப்புலராக இருந்தாலும், மகள் டயானாவை மட்டும் சினிமா பக்கம் கொண்டுவராமல் வைத்திருந்தார் கருணாஸ். டாக்டருக்கு படித்துள்ள டயானாவுக்கு தற்போது சைலண்டாக திருமணத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார். தனது அக்காவின் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கென் கருணாஸ், வாழ்த்துக்கள் மாமா & அக்கா என வாழ்த்தி இருக்கிறார். இதையடுத்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Chella

Next Post

சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு..!! தேர்வு நுழைவு சீட்டு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Feb 7 , 2023
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் […]

You May Like