இந்தியன் வங்கி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது அதன்படி 203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ இந்தியன் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இன்று இந்தியன் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. தகுதியுடையவர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் பதிவு செய்யப்படும் நபர்கள் முதலில் பட்டியலிடப்பட்டு பின்னர் அவர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் வைத்து அதிலிருந்து பணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியன் வங்கியின் இந்த அறிவிப்பின்படி நிதி ஆய்வாளர் பணிக்கு 60 காலியிடங்களும், கணினி அலுவலர் பணிக்கு 23, தகவல் பாதுகாப்பு பணிகளுக்கு 7 காலியிடங்களும், மார்க்கெட்டிங் ஆபிஸர் பணிகளுக்கு 13, கருவூல நிர்வாகி பணியிடங்களுக்கு 20 காலியிடங்களும் என வெவ்வேறு பிரிவுகளில் 23 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கடந்த மூன்றாம் தேதி வெளியிட்டிருக்கிறது இந்தியன் வங்கி. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான கல்வித் தகுதி உச்சபட்ச வயது வரம்பு சம்பளம் விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் பட்டியல் தயாரிப்பு நாள் எழுத்து தேர்வுக்கான நாள் ஆகியவை பற்றிய தகவல்களை பின்னர் அறிவிக்கப்படும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. அந்தத் தகவல்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட பின் இங்கு பகிரப்படும்.