ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன், அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் மற்றும் உதவி தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் மொத்தம் 60 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி அசிஸ்டன்ட் ப்ராசஸ் டெக்னீசியன் பணிகளுக்கு 30 காலியிடங்களும் உதவி நிலை தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு 18 காலியிடங்களும் அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன் பணிகளுக்கு 7 காலியிடங்களும் அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் பணிகளுக்கு 5 காலியிடங்களும் உள்ளன. இவற்றிற்கே தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகி இருக்கிறது.
இந்தப் பணிகளுக்கு ஊதியமாக 27,500 ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதில் இருந்து ஐந்து வயது தளர்வு அளிக்கப்படும். மேலும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று வயது தளர்வு அளிக்கப்படும். என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 25.02. 2023 முன்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசிஸ்டன்ட் பிராசஸ் டெக்னீசியன் பணிகளுக்கு கல்வித் தகுதியாக இளங்கலை பட்டத்தில் வேதியல் முக்கிய பாடமாக எடுத்திருக்க வேண்டும். அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன் பணிகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். உதவி நிலை தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத் திட்டத்துடன் 60சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அடிப்படை தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கான பட்டையை படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு பொதுத் திறன் தேர்வு மற்றும்
தொழில்முறை அறிவு பேராவலின் மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 590 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த வேலை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான hindustanpetrolem.com சென்று மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.