இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் லோக் சபா என்ற மக்களவை உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால் அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருப்பார்கள்..

ஆளுங்கட்சி எம்.பிக்கள் வலது புறத்திலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடதுபுறத்திலும் அமர்ந்திருப்பார்கள்.. மக்களவையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் நிலையான இருக்கைகள் உள்ளன.. மேலும் அனைத்து எம்.பி.க்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலையான இருக்கைகளில் மட்டுமே அமர வேண்டும். ஆனால் மக்களவையில் மொத்தம் உள்ள 545 இருக்கைகளில் ஒரு சிறப்பு இருக்கை உள்ளது..
ஆம்.. மக்களவையில் 420 என்ற நம்பரில் இருக்கை இல்லை.. பொதுவாக 420 என்ற எண், மோசடி அல்லது ஏமாற்று வேலை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் நாடாளுமன்றத்தில் 420 என்ற நம்பரில் இருக்கை இல்லை. அதற்கு பதில், 420வது இருக்கைக்கு 419-A என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக இருந்த பைஜயந்த் ஜெய் பாண்டாவும் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது பாஜகவின் துணைத் தலைவராக இருக்கும் அவர், இந்த நாற்காலியின் புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 419A பற்றி குறிப்பிட்டிருந்தார்.. கடந்த முறை, மக்களவையில் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) எம்பி பதுருதீன் அஜ்மலுக்கு 420க்கு பதிலாக 419-ஏ இடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..