GoDaddy நிறுவனம் 8 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஜூம் நிறுவனம் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.. அதே போல் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக இண்டர்நெட் நிறுவனமான Yahoo அறிவித்தது..
இந்நிலையில் உலகளாவிய வெப் ஹோஸ்டிங் தளமான GoDaddy நிறுவனம் 8 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து GoDaddy தலைமை நிர்வாக அதிகாரி அமன் பூட்டானி, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.. சில பொறுப்புகள் நீண்ட காலத்திற்கு தேவைப்படாமல் போகலாம் என்றும், “பாதிக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மார்ச் 1, 2023க்குள் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் ஒரு மாற்றம் தொகுப்பை வழங்கும் என்றும் கூறினார்..
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 12 வார ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பு, நீட்டிக்கப்பட்ட சுகாதாரப் பலன்கள், வெளியூர் மற்றும் குடியேற்ற ஆதரவு ஆகியவற்றைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டில் தற்போது வரை மட்டும், 336 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..