என்னதான் காலங்கள் நவீனமாக மாறினாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் தொன்று தொட்டு நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருமண சடங்குகளும். குறிப்பாக பண்டைய காலங்களில் திருமண ஊர்வலத்தின் போது திருமண தம்பதிகளை குதிரைகளின் மேல் ஏற்றி நகர்வலம் வருவது வழக்கம் தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இந்தப் பாரம்பரிய பழக்கங்கள் என்றும் மாறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய மணப் பெண்ணை ஹெலிகாப்டரில் ஊர்வலமாக அழைத்து வந்த செய்தி பகுதியில் உள்ள மக்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகருக்கு அருகே இருக்கக்கூடிய குரானா கிராமத்தைச் சார்ந்தவர்கள் சேம் மண்டலோய் மற்றும் யாஷ் மண்டலோய் உறவினர்களான இவர்கள் திருமணத்தின் போது தங்களது ஜோடிகளை ஹெலிகாப்டரின் மூலம் அழைத்து வந்து இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர்.
இது பற்றிய கருத்து தெரிவித்த அவர்கள்” தங்களுடைய தாத்தா அவர்களுடைய பேரன்மார் தங்களது மணமக்களை ஹெலிகாப்டரில் அழைத்து வரவேண்டும் என்று விரும்பி இருக்கிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக இவர்கள் தங்களது திருமணத்தின்போது ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்களது ஜோடிகளை ஊர்வலமாக இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் தங்களது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றியதாக பூரிப்புடன் கூறினர். மேலும் இந்த நிகழ்விற்கு பிறகு ஹெலிகாப்டரில் மணமக்களை அழைத்து வருவது தங்களது குடும்ப வழக்கமாக மாறிவிட்டது எனவும் தங்களது குழந்தைகளும் இதையே பின்பற்றுவார்கள் எனவும் தெரிவித்தனர்.
தங்களது திருமணத்தின் மூலம் மணமக்களை ஹெலிகாப்டரில் அழைத்து வருவது தங்களது பாரம்பரியத்தில் ஒன்றாகிவிட்டது என தெரிவித்த இவர்கள் தங்களது குழந்தைகளுக்கும் பேரன்களுக்கும் இதே பாரம்பரியத்தை தொடர போவதாகவும் தெரிவித்தனர். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றிய பேரன்களைப் பற்றிய செய்தி இந்தியா எங்கும் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெலிகாப்டரின் மூலம் மணமக்களை அழைத்து வந்த இவர்களை மத்திய பிரதேச மக்கள ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்க்கின்றனர்.