fbpx

“ சி.டி. ரவி சொன்னால் நான் முஸ்லீமாகி விடுவேனா..? நானும் இந்து தான்.. ஆனால்…” பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா..

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா இந்துத்துவா குறித்து கருத்து தெரிவித்ததற்காக பாஜக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொலை, வன்முறை மற்றும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானவன் என்று சித்தராமையா கூறியிருந்தார்.. இதனால் சித்தராமையா இந்துக்களுக்கு எதிரானவர் என்று பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்நிலையில் சித்தராமையா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.. தான் இந்து தர்மத்தை பின்பற்றும் ஒரு இந்து என்று தெளிவுபடுத்தினார்..

ஆனால் அதே நேரத்தில் நான் இந்துத்துவாவுக்கு எதிரானவன் என்றும் கூறி உள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் இந்து அல்லவா? உங்கள் கருத்துப்படி நீங்கள் இந்துவா இல்லையா? சி.டி.ரவி சொன்னால் நான் முஸ்லிமாகி விடுவேனா? என் அப்பா அம்மா இருவரும் இந்துக்கள், என் பெயர் சித்தராமையா, நான் இந்து மதத்தை நம்புகிறேன்.. பாஜக கூறுவதால் அது வேறு விதமாக மாறிவிட்டது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சித்தராமையா “எந்த மதமும் வன்முறையை ஊக்குவிக்கிறதா? ஆனால் இந்துத்துவா கொலை, வன்முறை மற்றும் பாகுபாடுகளை ஊக்குவிக்கின்றன. இந்து தர்மம் வேறு.. இந்துத்துவா வேறு.. நான் எப்பொழுதும் இந்து மற்றும் இந்து தர்மத்திற்கு எதிரானவன் என்று முன்னிறுத்தப்படுகிறேன். நான் இந்து தர்மத்திற்கு எதிரானவன் அல்ல. நானும் ஒரு இந்து தான். ஆனால் நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

பாக்ஸ் ஆபிஸை திக்கு முக்காட வைத்த முதல்வன் திரைப்படம்…..! எத்தனை கோடி வசூல் தெரியுமா….?

Sun Feb 12 , 2023
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சங்கர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் முதல்வன் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ரகுவரன். 90களில் வெளியான இந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. மேலும் கதாநாயகன் மற்றும் வில்லன் உள்ளிட்டோருக்கிடையில் காம்பினேஷன் படுஜோராக இருந்தது. மக்களால் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த […]

You May Like