fbpx

2-வது டெஸ்ட்..!! மாஸ் காட்டிய முகமது ஷமி..!! 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா..!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். இந்த ஜோடி 50 எடுத்த நிலையில், இருவரையும் முகமது சமி பிரித்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே – கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினர். 4 பவுண்டரிகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார்.

2-வது டெஸ்ட்..!! மாஸ் காட்டிய முகமது ஷமி..!! 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா..!!

ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Chella

Next Post

8 மணிநேரம்..!! டாட்டு கலைஞரை கதறவிட்ட நபர்..!! மனைவிக்கு மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்..!!

Fri Feb 17 , 2023
உலகம் முழுக்க பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த கணவன் தன்னுடைய மனைவிக்கு சர்ப்பரைஸ் கொடுக்கும் விதமாக செய்த நிகழ்வுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதாவது, Vall என்ற அந்த நபர் தன் மனைவி மீதான காதலை நிரூபிக்கும் விதமாக மறக்க முடியாத காதலர் தின பரிசாக தங்களுடைய திருமண சான்றிதழையே கையில் டாட்டுவாக குத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட […]
8 மணிநேரம்..!! டாட்டு கலைஞரை கதறவிட்ட நபர்..!! மனைவிக்கு மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்..!!

You May Like