fbpx

சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோயை குணப்படுத்தும் கோவக்காய்..!! தினமும் இப்படி சாப்பிட்டு பாருங்க..!!

கோவக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படும் கோவக்காயின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக எல்லா காய்கறிகளிலும் எதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் சில காய்களில் மருத்துவ குணங்கள் ஏராளமாக கொட்டி கிடக்கும். அப்படியொரு காய் தான் கோவக்காய். கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து நலம் தருகிறது.

உடல் பருமனைக் குறைக்க உதவும் கோவைக்காயின் வேரில் இத்தகைய பண்புகள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிசெய்து, செரிமான செயல்முறை நன்றாக இருக்கும் போது, ​​உடல் பருமனை குறைக்க உதவுகிறது. பச்சையாகவே கோவக்காயை மென்று துப்பினால் வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.

கோவக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. உடலில் இரும்புச் சத்து குறைவதால், நம் உடல் விரைவில் சோர்வடைந்து போவது தெரியும். கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதுடன், உடலில் சோர்வு பிரச்சனையும் நீக்க உதவும். இதனுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் கோவக்காய் உதவுகிறது.

கோவைக்காய் உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. ஏனெனில், இது தியாமின் கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ள கோவக்காய், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயம் சார்ந்த பிரச்சனை வராமல் தடுக்க உதவியாக உள்ளது.

Read More : இந்த ஒரு ஜூஸ் போதும்..!! சிறுநீரக கற்கள் பிரச்சனையே வராது..!! மருத்துவர்கள் கொடுக்கும் அட்வைஸ்..!!

English Summary

Eating guava daily provides many benefits to the body. Let’s find out what are the benefits of guava, which also acts as a medicine for many diseases.

Chella

Next Post

உங்க குழந்தையின் உயரம் அதிகரிக்க வேண்டுமா? இதை கொடுத்து பாருங்க, ஒரே மாதத்தில் வித்யாசம் தெரியும்..

Sun Dec 22 , 2024
foods to increase your children height

You May Like