பழம்பெரும் கன்னட இயக்குனர் உடல்நலக்குறைவால் காலமானார்.. முதலமைச்சர் இரங்கல்..

பிரபல கன்னட இயக்குனர் எஸ்.கே.பகவான் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89..

ஜூலை 5, 1933ல் பிறந்த பகவான், சிறு வயதிலேயே ஹிரண்ணையா மித்ர மண்டலியுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 1956ல் கனகல் பிரபாகர் சாஸ்திரியின் உதவியாளராக சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் ஏ.சி. நரசிம்ம மூர்த்தியுடன் இணைந்து ராஜதுர்கதா ரகசிய (1967) படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் துரை ராஜ் – பகவான் இருவரும் இணைந்து படங்களை இயக்க தொடங்கினர்.. ஜேம்ஸ்பாண்ட் பாணியில் திரைப்படங்களை இயக்கிய முதல் கன்னட இயக்குனர்கள் இவர்கள் தான்.


அடுத்தடுத்த ஆண்டுகளில், கஸ்தூரி நிவாசா, ஈரடு கனவு, பயலுதாரி, காற்றுமாது, சந்தனாட கோம்பே, ஹோசா பெலகு, பென்கிய பலே, ஜீவன சைத்ரா போன்ற பல படங்களையும், ஆபரேஷன் ஜாக்பாட், நல்லி C.I.D 999,போன்ற ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களையும் இருவரும் இயக்கினர். துரை ராஜ் காலமான பிறகு, பகவான் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்தார்.. 1996ஆம் ஆண்டு வெளியான பாலொண்டு சதுரங்கா என்ற படம், துரை ராஜ் – பகவான் இருவரும் இணைந்து இயக்கிய கடைசிப் படம் ஆகும்.

இந்நிலையில் கே.எஸ் பகவான் வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்ரீ எஸ்.கே. பகவானின் மறைவு செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

ஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தப்படுகிறதா..? தலைமைத் தேர்தல் அலுவலர் பரபரப்பு பேட்டி..!!

Mon Feb 20 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறுகையில், ’ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
Election 2

You May Like