குஜராத் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் சுரேந்தர் நகர் மாவட்டத்தில்தான் இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் மாவட்டத்தில் தானே நகர் பகுதியைச் சார்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று இதயம் சார்ந்த பிரச்சனையுடன் பிறந்திருக்கிறது. இதன் காரணமாக எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. கடந்த 25 ஆம் தேதி அந்தக் குழந்தை இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதன் உறவினர்கள் குழந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்து அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
அடக்கம் செய்த ஓரிரு நாட்களில் அந்த குழந்தையின் சடலம் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் அந்தரங்கப் பகுதிகளிலும் காயம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தையின் சடலத்தை யாரோ ஒரு மர்ம நபர் தோண்டி எடுத்து பலாத்காரம் செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அதன் சடலத்தை பலாத்காரம் செய்த நபரால் குஜராத் பகுதியில் மக்களை அதிரச் செய்திருக்கிறது.