fbpx

தொடரை வெல்லுமா இந்தியா..? இன்று 3-வது டெஸ்ட் போட்டி..!! ஆஸ்திரேலியாவுடன் மோதல்..!!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய அணியை திணறடித்து வருகின்றனர். தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸ் சொந்த வேலை காரணமாக நாடு திரும்பிவிட்டார். ஆகையால், அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸ்ஸூக்குப் பதில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்குப் பதில் சுப்மன் கில் களமிறக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுலுக்கு எதிராக சிலர் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கே.எல்.ராகுல் மோசமான பார்மில் இருக்கிறார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ரன்கள். கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் அவர் இவ்வளவு மோசமாக ஆடி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரை எப்படி எடுக்கலாம். இதனால் அவருக்கு பதில் கில்லிற்கு இடம் கொடுங்கள் என்று சிலர் வாதம் வைத்து வருகிறார்களாம்.

Chella

Next Post

காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இருவார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள்...!

Wed Mar 1 , 2023
தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இருவார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் நடைபெற உள்ளது ‌ தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இரு வார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் இன்று சென்னையின் கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை 2 வது தளத்தில் உள்ள கல்லூரி கவுன்சில் ஹாலில் நடைபெறுகிறது. பயனாளிகள், தொழிலாளர்கள், துறைசார்ந்தவர்கள் இந்த […]

You May Like