விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் குமரன். இதில் வரும் கதிர், முல்லை ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் முல்லை ரோலில் 3 நடிகைகள் இதுவரை மாறி இருக்கிறார்கள் என்றாலும், கதிர் ரோலில் குமரன் தான் தொடர்ந்து நடித்து வருகிறார். குமரன் சமீப காலமாக சீரியல் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வதந்தி வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து மாயதோட்டா என்ற சீரிஸில் மெயின் ரோலில் நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த பிறகு அவர் புது சீரியலில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இனி வெப் சீரிஸ் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.