fbpx

’விடுதலை’ படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த படத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடலான ‘ஒன்னொடு நடந்தா’ பாடல் இன்று வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் சோனி சவுத் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். காவல்துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரங்கள் காவலர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

”இதுல உனக்கு எந்த பொண்ணு வேணும்”..? டெலிகிராமில் இளம்பெண்களை வைத்து நடக்கும் பேரம்..!! அதிர்ச்சி

Fri Mar 3 , 2023
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 20). இவர், Pondicherry College Call Girls என்ற டெலகிராம் குழுவை உருவாக்கி அழகிய இளம் பெண்களின புகைப்படம், பெயர், மேற்கண்ட பெண்ணை முன்பதிவு செய்ய எவ்வளவு பணம் வேண்டும் என்ற விவரங்களை டெலிகிராம் குழுவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து இளைஞர்கள் அந்த நபரை டெலிகிராமில் தொடர்பு கொள்கிறார்கள். அரவிந்தனுடைய பெயரோ, புகைப்படமோ, செல் நம்பரோ, வங்கி கணக்கோ யாரும் தெரிந்து […]

You May Like