காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சோனியா காந்தி வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ். ராணா கூறுகையில், “காய்ச்சல் காரணமாக சோனியா காந்திக்கு, மூத்த மருத்துவர் அருப் பாசு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்திக்கு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.