காடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போய் மீண்டும் திரும்பி வருவதும் போன்ற காட்சிகளை நாம் சினிமாக்களில் கண்டு களித்திருப்போம். ஆனால் அதே போன்ற ஒரு சம்பவம் பொலிவியா நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு நடந்திருக்கிறது. பொலிவியா நாட்டைச் சார்ந்தவர் ஜொனாதன் அகஸ்டோ இவர் தனது நண்பர்களுடன் அமேசான் காடுகளுக்கு அட்வென்ஜர் சுற்றுலா சென்றிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப் பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எங்கேயோ வழி மாறி போயிருக்கிறார் ஜொனாதன்.
இவரை எங்கு தேடியும் அவரது நண்பர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் அவர் காணாமல் போன 31 நாட்கள் கழித்து நண்பர்களால் மீட்கப்பட்டிருக்கிறார். கடந்த 31 நாட்களாக காட்டுப்பகுதிகளில் மிகுந்த சிரமப்பட்டு சிறுத்தை போன்ற விலங்குகளிடமிருந்து தப்பித்து உணவிற்காக புழு, பூச்சிகளை உண்டு வாழ்ந்திருக்கிறார். மேலும் தனது ஷூவில் மழை தண்ணீரை சேகரித்து குடித்து வந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் ஜொனாதன்.