இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் இதற்கு முன்னர் பெற்றோர் சம்மதம் இருந்தால் 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. பல்வேறு ஆசிய நாடுகளில் திருமண வயதானது 18 என்று இருப்பதால் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சட்டம் குழந்தைகளை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதில் இருந்து பாதுகாக்க உதவும். முன்பு கட்டாயத் திருமணம், செய்தால் குற்றமாக இருந்தது. ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ள எந்த குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் முடித்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இந்த மாற்றங்கள் பொருந்தாது, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 16 ஆக இருக்கும். வடக்கு அயர்லாந்தில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை ஆனால் ஸ்காட்லாந்தில் இல்லை. வடக்கு அயர்லாந்தில் உள்ள அமைச்சர்கள், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரம் அளிக்கப்பட்ட அரசு தற்போது செயல்படாததால் சட்டத்தை கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.