fbpx

விவசாயிகள் கவனத்திற்கு..!! பயிர் காப்பீடு செய்ய இதுதான் கடைசி நாள்..!! உடனே வேலையை முடிச்சிருங்க..!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5%, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பண பயிர்களுக்கு 5% செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலமாக நெல், நெல் தரிசு பருத்தி, எள், கரும்பு, பருத்தி 3 ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் சிறு விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசிய மயமாகப் பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில் வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து பிறகு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்ற சேவை உள்ள ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அவசியம். பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்திற்கு ( நெல் III, எள்) 15.03.2023, (நெல் தரிசு பருத்தி, கரும்பு)31.03.2023, வேலூர் மாவட்டத்திற்கு (கரும்பு ) 31.03.2023, மயிலாடுதுறை நெல் III 15.03.2023, பருத்தி III, நெல் தரிசு பருத்தி, கரும்பு 31.03.2023, ஈரோடு மாவட்டத்திற்கு கரும்பு 31.03.2023, தஞ்சாவூர் III, நாமக்கல் மாவட்டத்திற்கு 15.03.2023, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 31.03.2023, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.03.2023 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Tue Mar 7 , 2023
தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 8ஆம் தேதி விடுமுறை என்றும் அன்றைய தினம் நடைபெற […]

You May Like