fbpx

விராட் கோலியை காதலித்த வீராங்கனை..!! காதலியை கரம்பிடித்த டேனியல் வியாட்..!! வைரலாகும் புகைப்படம்..!!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை. இவ்வளவு ஏன், விராட் கோலியை ஒருதலையாக காதலித்தும் வந்தார். அதனை விராட் கோலி ஏற்கவில்லை என்பதால் ஆண்களையே வெறுத்து விட்டார் என்று கூறும் அளவுக்கு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார். இவர் ட்விட்டரில் தனது தோழியுடன் முத்தம் கொடுப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். என்றுமே என்னுடையது என்ற கேப்ஷனுடன் கால்பந்து வீராங்கனை ஜார்ஜியா ஹாட்ஜுடன் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஜார்ஜியா ஹாட்ஜ் லண்டனில் உள்ள கால்பந்து அணியில் உள்ளார்.

டேனியல் வியாட் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 102 ஒருநாள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வீராங்கனையின் காதலுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விராட் கோலியை திருமணம் செய்வதாக விருப்பம் தெரிவித்த வியாட் தற்போது ஓரினச் சேர்க்கையாளரை திருமணம் செய்யவுள்ளதாக வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

கொரோனாவின் மற்றொரு வடிவமா..? H3N2 வைரஸ் எப்படி பரவுகிறது..? எப்படி தடுப்பது..?

Wed Mar 8 , 2023
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.. இந்த புதிய வைரஸ் மக்களில் சுவாசக் கோளாறுகளை தூண்டுகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. H3N2 எவ்வாறு பரவுகிறது.. ? H3N2 மிகவும் […]

You May Like